Sunday, May 27, 2018

கொண்டை ஊசி வளைவு -Hair Pin Bend

ஒரே நாளில் இரண்டு கொண்டை ஊசி வளைவு விபத்து..



சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப்பாதை உள்ளது. இந்த மலைப்பாதையில் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. தமிழகம்-கர்நாடகத்தை இணைக்கும் முக்கிய வழித்தடமாக திம்பம் மலைப்பாதை உள்ளது. இந்த மலைப்பாதை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான சரக்கு வாகனங்கள் சென்று வருகின்றன.

கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து திண்டுக்கல் நத்தம் பகுதிக்கு மாங்காய் பாரம் ஏற்றிக்கொண்டு லாரி நேற்று 25-05-2018 சென்று கொண்டிருந்தது. காலை 8 மணி அளவில் திம்பம் மலைப்பாதை 23-வது கொண்டை ஊசி வளைவில் லாரி திரும்பிய போது கட்டுப்பாட்டை இழந்து நடுரோட்டில் கவிழ்ந்தது. இதில் லாரியில் இருந்த மாங்காய்கள் ரோட்டில் சிதறின.



மற்றொரு விபத்தில்

நீலகிரி மாவட்டம் ஊட்டியி இருந்து மைசூரு நகரை நோக்கி கர்நாடக அரசு பேருந்து ஒன்று இன்று மாலை சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து கூடலூர் அருகே தவளமலை பகுதியில் உள்ள கொண்டை ஊசி வளைவில் திரும்பும் போது எதிர்பாராத விதமாக அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்ந்தது. 

தவிர்க்கும் வழி முறைகள்..

விபத்தை தவிர்க்க, 'கண்ணாடி பார்வை!' மலைப்பாதையில் அதிகாரிகள் கவனம்..



வால்பாறை:வால்பாறை ரோட்டிலுள்ள, கொண்டைஊசி வளைவுகளில் விபத்துக்களை தவிர்க்கும் வகையில், கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது.வால்பாறை செல்லும் வழித்தடத்தில், ஆழியாறில் இருந்து ஐயர்பாடி வரையிலும், 40 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. வால்பாறைக்கு சுற்றுலா வாகனங்கள் வருகை அதிகரித்துள்ளது. ஆனால், ஒரு வழிப்பாதை மட்டுமே உள்ளதால், அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது.விபத்துக்களை தவிர்க்கும் வகையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில், 48 இடங்களில், வாகன ஓட்டுனர்களின் பார்வைக்காக கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது. 
இதன் மூலம், எந்த திசையில் வாகனம் வந்தாலும் கண்ணாடியில் தெரிந்து கொண்டு, விபத்தை தவிர்க்க டிரைவர்களால் முடிவெடுக்க முடியும்.

- shared from internet resource.

No comments:

Post a Comment