குதிரிடல் (ஆங்கிலம்-granary,bunkering) என்பதுவேளாண்மையில் பயன்படுத்தப்படும் முக்கியமான நடைமுறையாகும்.நெடுங்காலமாகவே மனிதன் தனது எதிர்காலத்தேவைக்காக, விளைந்த தானியங்களைச்சேமித்து வைக்க இம்முறை பயன்படுத்துப் பட்டு வருகிறது.
சிமென்டு, கரி போன்றவற்றையும் பெருமளவில் குதிர்களில் சேமித்து வைப்பதற்குக் குதிரிடல் என்று பெயர்.தமிழகக் கிராமங்களில் உள்ள குதிர்கள் மரம், மண்,செங்கல் ஆகியவற்றினைக் கொண்டு சிறுஅளவில் உருவாக்கப்பட்டவை ஆகும்.இக்குதிர்கள் பெரிய அளவுகளில், பல விதங்களில் பயன்படுகின்றன.
இக்குதிர்களின் விட்டம் இரண்டு மீட்டர் முதல் ஆறு மீட்டர் வரையும், உயரம் மூன்று மீட்டர் முதல் நாற்பது மீட்டர் வரையும் அமைந்து இருக்கும். அடிப்பாகம் மட்டமாகவே/சமதளமாகவோ அல்லது சரிவாகவோ அமைக்கப்படுகிறது. சரிவானஅடிப்பாகம், குதிரின் அடிப்பாகத்தைத் திறந்தவுடன், குதிரில் சேமித்து வைக்கப்படும் பொருள் தாமாகவே வெளியில் வருமாறு உதவுகிறது.
இயந்திரங்களைப் பயன்படுத்தியும் உள்ளிட்டப் பொருட்களை எடுக்கும் முறைகளும் சில நேரத்தில் அமைக்கப்படுவதும் உண்டு. இக்குதிர்கள் தரைக்குக் கீழோ, தரைக்கு மேலோ அல்லது தூண்கள் மீது உயர்த்தியோ கட்டப்படும். உயர்த்திக் கட்டப்பட்டுள்ள குதிர்களிலிருந்து பாதுகாப்பாகச் சேமித்து வைக்கப்பட்ட பொருள், நேரடியாகவே வண்டிகளுக்கு மாற்றப்படும் வசதியையும் ஏற்படுத்துவர்.
குதிர்கள் பண்ணைகளில் உள்ளது போல தனியாகவோ, அல்லது துறைமுகங்களிலும்,ஆலைகளிலும் உள்ளது போல், பல குதிர்களாகவும் கட்டப்படுவதுண்டு. இவற்றின் குறுக்குவெட்டுத் தோற்றம் வட்டமாகவோ, அறுகோணமாகவோ, செவ்வகமாகவோ இருக்கும். குதிர்களின் மேல் கூரை அமைக்கும் வழக்கமும் உண்டு. பெருங்குதிர்களில் ஆட்கள்மூலமாகவோ, பட்டைச்செலுத்திகள் (belt conveyors) மூலமாகவோ பாதுகாக்கப் படவேண்டிய பொருட்கள் நிரப்பும் நடைமுறை பின்பிற்றப்படுகிறது.
- shared from internet resource.
No comments:
Post a Comment